திருக்கோவிலில் ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி

2004 சுனாமி தின அஞ்சலி மற்றும் இரத்தான நிகழ்வுகள் நாடு பூராக இடம்பெற்று வருகின்றது.

 

அந்த வகையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் 2004/12/26 இடம்பெற்ற ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது வழமை போல் இன்றும் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வானது திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமித் தூபியில் தலைவர் முருகமூர்த்தியின் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரனும், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சசிகுமார் மற்றும் திருக்கோவில் பொலிஸ்நிலையளு பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு லலீந்த பீரிஸும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

அதனைத்தொடர்ந்து மைதான வளாகத்தில் அன்னதானமும் இடம்பெற்றதுடன் சுனாமி அனர்த்தினால் உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை வைத்திய குழுவின் உதவியுடன் தம்பிலுவில் றேஞ்சர்ஸ் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய தேசிய பாடசாலை மண்டபத்தில் மாபெரும் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் குறித்த நிகழ்வுகளில் உயிர்த்த உறவுகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *