உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்களை பெப்ரல் அமைப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தலின்போது வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்கள் பெப்ரல் அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 800 க்கும் மேற்பட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

