பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே. ஜே முரளிதரன் தெரிவித்தார்.
இன்று(05) மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை(06) இடம் பெறவுள்ள தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 6000க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளது
நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும். அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்தில் 144 நிலையங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.