சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம். பி. எம் சுபியான் தெரிவித்தார்.
இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; நேற்று(04) இரவு களுவாஞ்சிக்குடியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அரிசி தொடர்பாக களுவாஞ்சிக்குடியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும். பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களித்து விட்டு தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதேவேளை மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 1500க்கும் மேற்பட்ட பொலிஸாரால் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இம்முறை விசேட தேவையுடையவர்களுக்காகவும் கண்பார்வை அற்றோர்களுக்காகவும் சிறப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் கண்காணிப்பு ரோந்து பணிகளும் இடம்பெற உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.