இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி

சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்குடன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இணைந்து, குப்பைகளை சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வரிசையில் விசேட சிரமதான நிகழ்வு நேற்று(04) காலை 7.00 மணி முதல் செல்வபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரைப்பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், 591 ஆவது இராணுவப் படையணியின் பொறுப்பதிகாரி, மாவட்ட செயலக அலுவலர்கள், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அலுவலர்கள், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *