பருத்திதுறை ஆதார வைத்தியசாலை வீதியில் கனரக வாகனம் செல்லத்தடை

மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன் உள்ள வீதியால் கனரகவாகனம் செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதாக அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்துக்கமைய நேற்று மந்திகை வைத்தியசாலைக்கு முன் உள்ள வீதியில் கனரகவாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *