இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் திறப்பு

காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளன.
ஆறு வான் கதவுகளின் இரண்டுவான் கதவுகள் 06 இஞ்க்கும் நான்கு வான்கதவுகள் ஒரு இஞ்க்கும் திறந்து விடப்பட்டுள்ளன.
0.149எம்சிஎம் நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து மழை எதிர்வு கூறல் காணப்படுகின்ற நிலையில் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *