கிளிநொச்சி மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான 1வது மாவட்ட விலை நிர்ணயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் – மாவட்ட விலை நிர்ணயக்குழுவின் துணைத்தலைவருமான முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் தொழிலாளர் கூலி மற்றும் வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் தொடர்பான விலை நிர்ணயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி மாகாண பிரதம செயலாளர் – பொறியியற் சேவை ( துணைத் தலைவர் – மாவட்ட விலை நிர்ணயக் குழு) மற்றும் மாவட்ட பொறியியலாளர் (செயலாளர் – அவை ஏற்பாட்டாளர் – மாவட்ட விலை நிர்ணயக் குழு) மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்ததாரர் சம்மேளத்தின் பிரதிநிதிகள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

