கிளிநொச்சி மாவட்ட செயலக 2025ம் ஆண்டுக்கான வருடாந்த இறுதி ஒன்றுகூடலும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழாவும் நேற்று(07) மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்க தலைவர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில், இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள், பரீட்சைகளில் சித்திபெற்ற மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள், உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சி போன்றன நடைபெற்றன.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்தம் பிள்ளைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


