நாட்டில் தொடர்ச்சியான அதிகரித்து வரும் மழை வீழ்ச்சியால், கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடு குளம் அதன் முழு கொள்ளளவை அடைந்துள்ளதோடு, கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடுகுளம் என்பவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஊடாக வட்டகத்தி செல்லும் வீதியில், விவசாய பண்ணைக்கு அருகில் பனைமரம் சாய்ந்துள்ளது.
அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

