கிளியூர் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிளியூர் சுப்பர் லீக் இருபதுக்கு இருபது பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டத் தொடருக்கான அணிகள், வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று மாலை கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
குறித்த சுற்றுத்தொடரின் தலைவர் செல்வராசா ரமேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் சத்தியஜீவிதா கலந்து கொண்டார்.
நிகழ்வின் விருந்தினர்களாக மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வேலாயுதம் சுந்தரலிங்கம், மாவட்ட விளையாட்டு அதிகாரி மோகன்தாஸ் கிளிநொச்சி மாவட்டத்தின் தடகளம் மற்றும் மேசைப் பந்து பயிற்றுவிப்பாளர் குமார், கிளிநொச்சி இந்து கல்லூரி அதிபர் ஜோய் பியசீலன், வடமாகாண நடுவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் கிருபாகரன், கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் இளவேந்தி நிர்மலாராஜ், குறித்த போட்டியின் நிறுவுநர் புண்ணியமூர்த்தி சாய்மோகன் மற்றும் போட்டியிடுகின்ற பத்து அணிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போட்டியானது பெப்ரவரி மாதம் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

