மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர், மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அம்பாள் குளம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ரவீனா (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கடந்த 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *