யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானை இன்று(13) வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு குறித்த பொங்கல் பானையை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


