பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு; தாழ்நில பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று இரவு தலா 06 அங்குலம் திறக்கப்பட்டதாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே, தாழ்வான பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் கொள்ளளவு 27,000 ஏக்கர் அடி. இங்கு வான் கதவுகள் திறக்கப்படுவதால் பல கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே, இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *