வவுனியாவில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்

மலரவுள்ள பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நகரத்திற்கு வருகை தந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் புத்தாடைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக வவுனியா நகரிற்கு வருகை தருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இதற்காக நகரப்பகுதியில் தற்காலிக கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
மக்கள் மகிழ்ச்சியுடனும் சாந்தி சமாதானத்துடனும் இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *