இலங்கை குடியரசில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட புனித அல் குர்ஆன் மனனப் போட்டியின் நிறைவு விழா, சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 2026 ஜனவரி 12 அன்று கொழும்பு ஐடிசி ஹோட்டலில் நடைபெற்றது.
மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலாபர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது பரிசில்களும் விருதுகளும் வழங்கி கெளரவிக்கக்ப்பட்டனர்.

