யாழ்ப்பாணம் தாவாடி பகுதியில் உள்ள மௌபிம ஜனதா கட்சி அலுவலகம் நேற்று(13) நள்ளிரவு ஒரு குழுவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட தலைமை அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் கட்சி அலுவலகம் அமைந்துள்ள வீடு மற்றும் கட்டிடத்தில் தீப் பரவல் ஏற்பட்டது.
சிசிரிவி கெமராவில், கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பது பதிவாகியுள்ளது, மேலும் இது ஆரம்பக் கட்ட தகவல்களிலிருந்தும் தெரியவந்துள்ளது.
தீப் பரவலில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

