கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பன்னங்கண்டி முரசு மோட்டை கண்டாவளை பெரியபரந்தன் ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் குறித்த டிப்பர் மற்றும் உழவுயந்திரங்கள் கிளிநொச்சி பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட தடயப் பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்துவதற்காக முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

