மன்னாரில் டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத்தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முதல்க் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 42 இந்து ஆலயங்கள், 17 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 பள்ளிவாசல்கள் என 65 வழிபாட்டுத் தலங்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவுகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மூன்று பௌத்த விகாரைகளுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *