நாட்டின் முதல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம் திறப்பு

நாட்டின் முதல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம் இன்று(23) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேரத்ன மற்றும் கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மையம் வவுனியா மல்வத்த வீதியில் உள்ள பல்கலைக்கழக வாளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில்முனைவு, புதுமை, ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கல், வணிக மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆதரவு மையம் ஆகியவை இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியும் இன்று அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டன.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள் நிறுவப்படும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றன.
பெரும்பாலான பாடசாலை மாணவர்களும் இக் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகாநாதன் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *