செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் இன்று(25) காலை செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இருந்து சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சிறிய தொகைப் பணமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது இன்று வாரத் திருப்பலியினைத் தொடர்ந்து செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் சிறிய உரையினைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இந் நிகழ்வில் செம்பியன் பற்று வடக்கு பங்கு மக்கள், இளைஞர்கள் மற்றும் அருட்சகோதரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.

