கடந்த 23ஆம் திகதி அன்று மாலை தர்மபுரப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை எதிரே வந்த கப்ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று(26) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சுண்டிக்குளம் சந்திப் பகுதியைச் சேர்ந்த ஆதி மூலம் சிவகுமார் 55 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே குறித்த சம்பவத்தின் தொடர்புடைய வாகன சாரதி தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இறந்தவரின் சடலம் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

