யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி, அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்கத் தொலைபேசியைக் களவாடியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு, கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பான பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *