ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கும் கனடா தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

நேற்று(27) மாலை 4 மணியளவில் கனடா தூதுவருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ஹோட்டலில் இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எதிர் கால அரசியல் நகர்வுகள் மற்றும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடல் ஆனது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்றதுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்கள் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *