பதுளை – வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தில் சதுரங்க பயிற்சி முகாம்

பதுளை – வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர் சிவயோகராஜாவின் ஆதரவில் வித்தியாலய சிவஸ்ரீ மண்டபத்தில் சதுரங்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் நடேசன் சுந்தர்ராஜின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சதுரங்க பயிற்சியாளர் சிறுதுளி பிரபா மாணவர்களுக்கு முறையாக சதுரங்க விளையாட்டுப் பயிற்சி செயற்பாடுகளை வழங்கினார்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட ஐம்பது மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றி பயனடைந்தனர்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளினூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை முன்னெடுத்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்திற்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *