ஆவரங்கால் – தொண்டமானாறு வீதி 670.58 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு

யாழ் மாவட்டத்தில் ஆவரங்கால் – தொண்டமானாறு வீதியின் (பி33) புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்று(11) காலை 8.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இவ் வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை விருந்தினர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ், வடமகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் குரூஸ், கோப்பாய் பிரதேச செயலாளர் தயாரூபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கபிலன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
“மறுமலர்ச்சிக்கான பாதை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 670.58 மில்லியன் ரூபா செலவில் 6.03 கி.மீ. நீளமான குறித்த வீதி புனரமைப்பு
செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *