இத்தாலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(12) நடைபெறுகிறது.

 

மும்பையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி இத்தாலி அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

நேபாளம் அணி சார்பில் ஆரிஃப் ஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றார்.

 

இத்தாலி அணி சார்பாகப் பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

இந்நிலையில் இத்தாலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *