நுவரெலியா அரச பேருந்து நிலைய உள் வீதி சேதம்; சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

மத்திய மலைநாட்டின் பிரதான நகரமான நுவரெலியாவில் அமைந்துள்ள அரச பேருந்து நிலையத்தின் உள் சுற்றுவட்ட வீதி கடும் குன்றுகளும் குழிகளும் நிறைந்த நிலையில் காணப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இவ்வீதி முறையாகச் சீரமைக்கப்படாததால், பேருந்து பழுது பார்க்கும் நிலையத்திற்கு செல்லும் பாதை பயன்பாட்டுக்கு ஒவ்வாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளே சென்று வருவதிலும் சிரமம் நிலவுகிறது.மேலும், பழுது பார்க்க கொண்டு வரப்படும் பேருந்துகளை நிலையத்தின் உள் பகுதியிற்குள் செலுத்துவதும் மிகுந்த சிரமத்துடன் மேற்கொள்ளப்படுவதாக சாரதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடி கவனம் செலுத்தி, பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தின் சுற்றுவட்ட வீதியை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *