வத்தளை பகுதியில் வெடிமருந்துகள் மற்றும் சிம் அட்டைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு 13ஆம் திகதி நடத்திய சோதனையில் ரி-56, ரிவால்வர், பிஸ்டல் ரக வெடிமருந்துகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தெல்வல–உதாதலகம பகுதியில் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய நீதிமன்றங்களால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைக்காக 72 மணி நேர தடுப்புக்காவல் பெறப்படவுள்ளது.

