நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(20) காலை 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நில்தந்தஹின்ன, வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மாவட்டத்தின், மீகஹகிவுல, கந்தகெட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

