கண்டி கன்னொருவ மேற்கு பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து துண்டிப்பு

கண்டி மாவட்டம் கன்னொருவ மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதிகள் மற்றும் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கன்னொருவ மேற்கு வீதியினூடாகப் பயணிக்கும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, பல இடங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றன.
இப்பகுதியில் நிலவும் ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் வெள்ளம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த பகுதியைச் சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *