ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்ட நிர்வாக தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(22) ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறும், நிரந்தர நியமனம் வழங்குமாறும் குற்றஞ்சாட்டி, மலையக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியம் இன்று ஹட்டன் ரயில் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை காரணமாக தாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *