ஊவா மாகாண இளைஞர் சேவைகள் அனுசரணையுடன் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று(24) பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறிவிப்பு, தமிழ் மற்றும் சிங்கள பாரம்பரிய நடனங்கள், நாடகம் உள்ளிட்ட பல்துறை திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இரு நாள் அறிவிப்புத்துறை பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தினிது சமன் ஹென்னாயக்க கலந்து கொண்டார். மேலும், சிறப்பு விருந்தினராக அனுஷா கோகுல கலந்து கொண்டார்.
அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் – ஊவா மாகாண பணிப்பாளர் ஜனத் லியனகே உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

