ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தினால் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட எருவில் கிழக்கு கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று திங்கட்கிழமை(23) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் எனும் தன்னார்வ நிறுவனத்தினால் அப்பகுதி யுவதிகளுக்கு இலவசமாக இந்த தையல் பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் ஸ்தாபகர் ஜெஜீவன் வழிநடாத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைவர் ஜோன் தயாழினி, ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் உப தலைவர் சீலன், பணியாளர்களான திருக்குமரன் செந்தூரன் தொழிலதிபர் பாக்கியராசா கமலநாதன், மதத் தலைவர்கள், அவ்வமைப்பின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தையல் தொழில்பயிற்சி நிலையத்தில் அப்பகுதியிலுள்ள யுவதிகளுக்கு, இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் எதிர்காலத்தில் சுய பொருளாதாரத்தில் முன்னேறக்கூடிய வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *