மஸ்கெலியா பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(28) காலை, மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பிரவுன்ஸ்விக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

