டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முறையற்ற செயல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அச்சம்பவம் தொடர்பில், சடலத்துக்கு வன்புணர்வு அல்லது ஏதேனும் முறையற்ற செயல்கள் இடம்பெற்றிருந்தது. உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று(06) டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இச்சம்பவத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த முயற்சி செய்வதுடன், இனவாதத்தைத் தூண்டும் முயற்சிகளும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், பொலிஸார் சந்தேக நபர்களை மையமாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விடயம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

