மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அப்பகுதி மக்களை கடத்திச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கடத்தப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

