சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை வெப்பச் சுட்டெண் என அழைக்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வெப்பச் சுட்டெண்ணானது மனித உடலில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இது சாரீரப்பதன் மற்றும் வெப்பநிலை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாகும். இதை ஒரு அதிகரித்த வெப்பநிலை என கருத முடியாது.
வளிமண்டலத்தில் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படும் இதேவேளை வளிமண்டல வெப்பநிலையும் அதிகரித்துக் காணப்படும்.
ஆனால் உண்மையில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதன் குறைவடையவேண்டும். அவ்வாறு இல்லாமையினால் இவ் வெப்பச் சுட்டெண்ணானது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

