காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டுக்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான இஸ்மாயில் இன்று முதல் காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையேற்றார்.
இன்று(09) முதல் 18.03.2026 வரை காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையாற்ற தனது பொறுப்புகளை காரைதீவு பிரதேச சபை செயலாளர் வனிதா டேவிட் அமிர்தலிங்கம் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ரணீஸ் கலந்து கொண்டார்.

