வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சலவை இயந்திரம் அன்பளிப்பு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சலவை இயந்திரமொன்று 09 ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் தேவைக்காக வைத்தியசாலையில் கடமையாற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அல்ஹாஜ் பதுறுதீன் (ஜே.பி) கேட்டுக் கொண்டதிற்கு அமைவாக மாவடிச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள சுகாத் பாம் கவுஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ.பி. சித்தீக் சலவை இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.
வைத்தியசாலையின் நலன் கருதி சலவை இயந்திரத்தை அன்பளிப்பு செய்த அல்ஹாஜ் சித்தீக்கு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சரவணபவன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *