பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த மீன்பிடி படகில் 123 கி.கி ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 300 மில்லியன் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட நீண்டநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை 5 சந்தேகநபர்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

