நாட்டின் மத்திய, சபரகமுவ, ஊவா, தென், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

