ஹட்டனில் சுற்றுலா பயணிகளுக்கான நவீன பஸ் சேவை இன்று ஆரம்பம்

40 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேற்கொள்வதற்கான பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இரத்மலானையிலிருந்து அட்டன் டிப்போவிற்கு 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறித்த பஸ் முற்றுமுழுதாக திருத்தியமைக்கப்பட்டு முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்டம் சுற்றுலா பிரதேசம் என்றவகையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது.

 

இந் நிலையிலே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சட்ட விதிமுறைகளுக்கமைய நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 

ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித்த தலைமையிலும் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஸ்ணன் கலைச்செல்வி, ஹட்டன்- டிக்கோயா சகர சபை உறுப்பினர் அசோக்க கருணாரட்ண நோர்வூட் பிரதேச சபையின் பிரதி செயலாளர் நுவரெலியா மாவட்ட போக்குவரத்து சேவை பொறுப்பதிகாரி, ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசூரிய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகததாச, உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *