மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கன மழைடன் கூடிய பனி மூட்டம் நிலவுகிறது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கன மழையுடன் இடி மின்னலுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது.
இதன் காரணமாக சிவனடி பாத மலை பருவ காலம் நிறைவு பெற உள்ள வேளையில் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வன்னம் உள்ளனர். அத்துடன் கினிகத்தேன அம்பகமுவ நோட்டன் மஸ்கெலியா ஹட்டன் நல்லதண்ணி பொகவந்தலாவ நோர்வூட் கொட்டகலை லிந்துல நானுஓயா நுவரெலியா பகுதியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் வாகனங்களில் மின் ஒளியை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன மழை பெய்து வருவதால் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் அங்கு உள்ள பிரதான கங்கையில் நீராட வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு வரும் யாத்திரீகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு உபதேசம் செய்து வருகின்றார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மரக்கறிகளின் விலைகள் வான் உச்சத்தை எட்டியுள்ளது.

