மூதூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, விலை உயர்ந்த 155 மூட்டைகள் அடங்கிய சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சங்குகள், கல்முனை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

