ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஓட்டமாவடி–01 பொதுச்சுகாதாரப்பரிசோதகர் பிரிவில் இயங்கி வரும் உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் பிற உணவு சேவை வழங்கும் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை வாட்ஸ்அப் ஊடாகத்தெரிவிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் நேற்று(09) ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நெளபல், ஓட்டமாவடி–01 பொதுச்சுகாதாரப் பரிசோதகர் என்.எம்.ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வாடிக்கையாளர்களாகிய நீங்கள் பெற்றுக்கொள்ளும் உணவுகளின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் குறைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், அவற்றை எந்நேரத்திலும் வாட்ஸ்அப் இலக்கதினூடாவோ அல்லது உங்கள் பிரிவுக்குப்பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் தொடர்பு இலக்கத்திற்கோ அல்லது நேரடியாகவோ தகவல் வழங்க முடியுமெனவும் பொதுமக்களின் ஒத்துழைப்பே பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்கலை உறுதிப்படுத்துமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

