5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் நடத்தி வரும் கடைக்குப் பிஸ்கட் வாங்கச் சென்ற சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று இந்தச் செயலுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *