கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்ற பிரதியமைச்சர், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அவர், தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில், பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன் மற்றும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிவசோதி சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

