மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஷி ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு செயற்றிட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இந் நிகழ்வு இடம்பெற்றது. கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்குத் தேவையான விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.


