டைக்வாண்டோ போட்டியில் சிசிலியா தேசியப் பாடசாலை மாணவிகளின் சாதனை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான டைக்வாண்டோ போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றன.

 

இப்போட்டியில் சிசிலியா தேசியப் பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 

இதில், அ. அமோரிட்டா +75 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும், ருக்சியா ஓக்கர்ஸ் – 62 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஜி. அனுசாதனா – 49 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

மாணவிகளின் இந்த வெற்றிக்கு பாடசாலையின் சுகாதாரக் கல்வி ஆசிரியர் மயூரி சஜந்தன் மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்காற்றியுள்ளன.

 

மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்ற இம்மாணவிகள், எதிர்வரும் தேசிய மட்ட டைக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *